முக்கிய குறிப்பு: ‘குர் ஆனைப் புரிந்து கொள்ளுங்கள்’ அடிப்படை பாடம்
இந்த வகுப்பு 2011 அல்லது அதற்கு முன் படிக்க ஆரம்பித்த மாணவர்களுக்கு மட்டும்.
இப்போது நாங்கள் புதிய, மேம்படுத்தப்பட்ட பாடங்களை அளிக்கிறோம்:
குர்ஆனின் 50% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்
குர்ஆனின் 70% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்
இந்த ‘அடிப்படைப் பாடம்’ 2004ல் தொடங்கப்பட்ட முதல் பாடம். இப்போது நாங்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு குறும்பயிற்சிகளை உருவாக்கியுள்ளோம். இவை ‘குர் ஆனைப் புரிந்து கொள்ளுங்கள் அடிப்படை பாடம்’என்ற பாடத்திட்டத்தின் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள். இவற்றுடன் குறிப்புகள், ஆலோசனைகள், தந்திரங்கள் மற்றும் பயிற்சிகள் இணைந்துள்ளன. நாங்கள் உங்களை உடனடியாக இதில் சேர்ந்து பயனடையும்படி பரிந்துரை செய்வது ஏனென்றால், இவ்வகுப்புகள் ‘அடிப்படைப்பாட’த்தை விட மும்மடங்கு சிறந்தவை. அதனால், இங்கே தொடங்குங்கள்!
உலக முழுதும் நடக்கக்கூடிய நேரடி வகுப்புகளில் ஆசிரியர்கள் இன்னும் அடிப்படைப்பாடம் என்ற பெயரைத்தான் உபயோகிக்கிறார்கள்.
பாடத்திட்டத்தின் அம்சங்கள்:
பாடங்கள் எப்படி இருக்கும்?
தினமும் 20 நிமிடங்கள் ஒதுக்குங்கள், இன்ஷா அல்லாஹ், நீங்கள் உங்கள் கனவு நிறைவேறும் பாதையில் இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு அமர்விலும் உள்ள 3 மாறுபட்ட செயல்களால் பங்கெடுப்பவர்கள் அமர்வு முழுவதிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்:
ஒவ்வொரு அமர்விலும் குறைந்த பட்சம் ஒரு பேச்சு மொழி அரபி வாக்கியத்தையாவது கற்பது.
ஒவ்வொரு அமர்விலும் வெறும் 8 லிருந்து 10 நிமிடங்கள் செலவழிப்பதன் மூலம் அடிப்படை இலக்கணமும் ஏறக்குறைய அனைத்து முக்கிய வினைச்சொல் படிவங்களையும் படிக்கலாம்.
நீங்கள் எப்படி படிப்பீர்கள்?
குர் ஆனைஅரபியில் அதிவேகமாகவும், மிக எளிதாகவும் கற்கும் வழி!
அரபி இலக்கணம் கற்பது இத்தனை சுலபமாகவும், எளிதாகவும் ஒரு காலத்திலும் இருந்திருக்காது. இலக்கணம் பழகுவதற்கு ஒரு புதிய அணுகுமுறை – முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாட்டு முறை (TPI-Total Physical Interaction). அதை நினையுங்கள், காணுங்கள், கூறுங்கள், காண்பியுங்கள். இது அரபி மொழியில் உள்ள மிக்க கடினமான பகுதியான ‘ஃப’அல’ (conjugation of a verb)அட்டவணையைப் படிக்க மிகவும் சக்தி வாய்ந்த, மிக எளிய யுத்திகளில் ஒன்று. இந்தப்பாடத்தில் தான் பொதுவாக மக்கள் அரபி படிப்பதை விட்டு விடுவார்கள். ஆனால், TPI – முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாட்டு முறையினால் எதிர் மறையாகிறது, அதாவது, மிக பரபரப்பானதாகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் உள்ளது.
ஒவ்வொரு முறை நீங்கள் இலக்கணம் பழகும் போதும் (5-7 நிமிடங்கள்) குர் ஆனைப் புரிந்து கொள்வதை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். அதனால் அந்த அமர்வு உங்களைச் சலிப்படைய வைப்பதற்கு மாறாக நீங்கள் விரும்பக் கூடியதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும்.
இலக்கணத்தின் சில ‘விசித்திரமான’விதிகளை நினைவில் வைத்துக்கொள்ள சுவாரசியமான உதாரணங்கள்/போலியான தொடர்புகள் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள்.
எப்படி மீள்பார்வை செய்வீர்கள்?
அதி வேகமான, கேளிக்கை நிறைந்த மீள் பார்வை உத்திகள்! உடனடி பயிற்சிகள்!
இறுதியாக வரக்கூடிய ‘சிறப்பு 10’ அமர்வுகளில், குர் ஆனில் அடிக்கடி வரக்கூடிய சொற்கள் தனியாக பட்டியலிடப்பட்டிருக்கும். நீங்கள் கற்றவைஅனைத்தையும் மீள்பார்வை செய்யுங்கள். முக்கியமான சொற்களை ஞாபகப்படுத்த, பழக, நினைவில் நிறுத்தி வைத்துக்கொள்ள, நீங்கள் படித்த ஒவ்வொரு சொல்லும்/ வினைச்சொல்லும் ஒரு உதாரணத்தோடு கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு முக்கியமான புதிய சொல்லை மறக்கும் போதும், உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு சூழல் கொடுக்கப்படும்.
முதல் 50 அமர்வுகளில் நடத்திய முக்கியமான வினைச்சொல் வடிவங்களையும் உதாரணங்களோடு ஆழ்ந்து, முழுமையாகப் படியுங்கள். உங்கள் முன்னேற்றத்தை மதிப்பிடவும், மீள்பார்வை செய்து தொடரவும் 16 வினா விடைகளும் 2 பரிட்சைகளும் (பயிற்சி ஏட்டில்) உள்ளன.
இந்த அமர்வுகள் முழுவதிலும் ஒளிக்கோப்புகளை காணும் போது சக மாணவர்களோடு சேர்ந்து பங்கெடுங்கள். பயிற்சி செய்வதற்கு இன்னொரு அமர்வுக்காக நீங்கள் காத்திருக்க தேவையில்லை. அவ்விடத்திலேயே பயிற்சி செய்யுங்கள்! 60 அமர்வுகளாக நடந்த முழு பாடத்தையும் உள்ளடக்கிய mp3கோப்புகள் அடங்கிய குறுந்தகடும் இருக்கிறது. சமீபத்தில்இவ்வகுப்பின் பதிவு செய்யப்பட்ட சுறுக்கமான (4 மணி நேரம்) படிவமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமான அடிப்படை பயிற்சி!
உண்மையில் இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தேவையான ஒரு அடிப்படை பயிற்சி. இது ஒரு முஸ்லிம் அன்றாடம் உபயோகிக்கக் கூடிய பகுதிகளை அடக்கியுள்ளதால் இப்பயிற்சி உங்கள் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுடைய வழக்கமான தொழுகையை இன்னும் சிறப்பாகவும் திறன் மிக்கதாகவும் மாற்றும். அதே சமயம் உங்களுக்கு குர் ஆனை வெகு எளிதாக கற்கலாம் என்ற நம்பிக்கையும் உண்டாகும். இந்த நோக்கில் காணும்போது இந்த படிப்பு ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், பள்ளி அல்லது அமைப்பிற்க்கும் மிகச் சிறந்த அடிப்படை சாதனமாக இருக்கும்.
உடனே பதிவு செய்து ‘குர்ஆனின் 50% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்’ வகுப்பில் சேர்ந்து அதைத்தொடர்ந்து ‘குர்ஆனின் 70% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்’ பாடங்களையும் படியுங்கள்.
குர் ஆனைப் புரிந்து கொள்ள விரும்பும் வேலைப்பளுவினால் நேரமின்றி இருப்பவர்களுக்கு, எளிதான வழி!