டாக்டர் அப்துல் அஸீஸ் அவர்கள், குர்’ஆனைப் புரிந்து கொள்வதைப் பற்றி, சுமார் 50லிருந்து, 500 வரை நிரம்பிய சபைகளில, ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மதரஸா மாணவர்கள் என்று எல்லா தரப்பினருக்குமிடையே, எண்ணற்ற சொற்பொழிவுகளையும், குறும்பயிற்சிகளையும், பல இடங்களிலும், நடத்தியுள்ளார். அவை நடந்த இடங்கள்:
இந்தியா: ஹைதராபாத், பெங்களூரு, டில்லி, மும்பை, அலிகார், ஔரங்காபாத், நாக்பூர், சென்னை, காலிகட், மங்ளூர், தும்கூர், பரேலி, ஆஸம்கர், ஃபைஸாபாத், ஜைய்பூர், அகோலா, கரீம்நகர், நாண்டெட், இன்னும் பல.
சௌதி அரேபியா: ரியாத், ஜித்தா, தமாம், கோபர், ஜுபைல், காஃப்ஜி
பஹ்ரைன், துபை, ஷார்ஜா, அபுதாபி, இன்னும் அமெரிக்காவில் சில நகரங்கள்.
பள்ளி மாணவர்களுக்கிடையே, அவர்களுடைய வாழ்வில் குர்’ஆன் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். அவர் சென்ற பள்ளிகளில் முக்கியமான சில, ஹம்தர்த் பள்ளி, டில்லி, பிரின்ஸஸ் எஸ்ஸின் பள்ளி, ஹைதராபாத், இக்ரா பள்ளி, ஔரங்காபாத், ரெஸிடென்ஷியல் பள்ளி, குல்தாபாத், இன்னும் பல.
அவருடைய குறும்பயிற்சியை (9 மணி நேரம், 4.5 மணி நேரமாக இரண்டு அமர்வுகள் அல்லது, 3 மணி நேர, 3 அமர்வுகள்) நீங்கள் விரும்பினால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: _____________________
இன் ஷா அல்லாஹ், சாத்தியக்கூறுகளை அனுசரித்து வகுப்புக்கு ஏற்பாடு செய்கிறோம்.