இதயத்தையும் மனதையும் விழிப்படைய செய்தல்

 

திண்ணமாக, பேச்சுக்களில் சிறந்தது அல்லாஹ்(சுபஹ்)வின் பேச்சு, வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது நபி (ஸல்) அவர்களுடையது.

அல்லாஹ் (சுபஹ்) குர்ஆனில் கூறுகிறான்: ‘அப்போது நீங்களும் பிரிவினர்கள் ஆகி விடுவீர்கள் அதாவது தனிப்பிரிவுகள் [அல் குர்ஆன் 56:7]

ஆகிர(மறுமை)த்தில் நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம் என்பது முஸ்லிம்களுக்கு பொது அறிவு. புனித குர்ஆனின் அழகும் சொல்வளமுமிக்க வசனங்களின் மூலம் நாம் நம் மனதையும், இதயத்தையும் விழிப்படையச்செய்ய வேண்டும்; நம்முடைய நம்பிக்கை உதட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. அகிலங்களின் அதிபதிக்கு கீழ்ப்படியக்கூடிய விசுவாசம் இதயத்திலிருந்து வர வேண்டும்.

விசுவாசத்துடன் நாம் என்ன செய்ய வேண்டும்?

மறுமை, சுவனம், நரகம் இவை நிச்சயம் என்பதில் நம் நம்பிக்கையை உறுதி செய்து கொண்ட பின், நம்முடைய ஆன்மாக்களிடம் கீழ்க்கண்டவாறு கேள்விகள் கேட்கலாம்:

அல்லாஹ் தன் கருணையினால் என்னைத் தன் சுவனத்திற்க்குள் ஏற்றுக்கொள்வானா?

தகுதிகள் என்னென்ன?

நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாக அவற்றை நிறைவேற்றுகிறேனா?

அல்லாஹ்(சுபஹ்) கூறுகிறான்:

‘உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்க்காக அவன் மரணத்தையும், வாழ்வையும்படைத்தான். மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன் மிகமன்னிப்பவன்’ [அல் குர்ஆன் 67:2]

அதனால், செயல்களில் சிறந்தவை எவை? நாம் ஏன் மிகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டும் – ஏன் சாதாரணமான நற்செயல்களையும், திருப்தியளிக்கக் கூடியவற்றையும் செய்யக் கூடாது?

போட்டி உலகம்

அல்லாஹ்(சுபஹ்) தன் அளப்பரிய கருணையினால் தன் அடிமைகளிடம் கூறுகிறான், அவன் நம்மை மூன்று தனிக் குழுக்களாகப் பிரிப்பான். மேலும், வாழ்வும், மரணமும், மிகச் சிறந்தவற்றிற்காக நம்மைப் போட்டியிட வற்புறுத்தும் வெறும் சோதனைகள் தான். எதற்காகப் போட்டியிடுவது? செல்வத்திற்காக அல்ல. அந்தஸ்த்துக்காக அல்ல. வீடுகளுக்காக அல்ல. மாறாக, நம்மைப் படைத்தவனின் திருப்தியை நாடி, மிகச்சிறந்த அமல்களைச் செய்வதில் போட்டியிட உண்மையாக முயல வேண்டும்.

போட்டி எதற்கு?

உங்களுக்கு உயிரைத் தந்த இறைவன், உங்கள் அதிபதி தன்னுடைய படைப்புகளில் உங்கள் மீது திருப்தியடைந்து உங்களுக்கு உதவுவான் என்பதை உணர்ந்தீர்களானால், நிச்சயமாக நீங்கள் நற்செயல்கள்– தூய்மையான எண்ணத்துடன் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி, மிகச்சிறந்த முறையில் செய்வதைத் தவிர வேறெதற்க்கும் போட்டியிடமாட்டீர்கள்.

அளவற்ற கருணையாளன் சூரத்துல் வாக்கியாவில் என்ன சொல்கிறான் என்பதை மீண்டும் நோக்கும் போது, நீங்கள் மூன்று பிரிவில் மிகச்சிறந்த பிரிவு – சாபிகூன் – எல்லாம் வல்ல இறைவனுக்கு அருகில் செல்லக் கூடியவர்களில் இருப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் ஜன்னத்துல் நயீமில் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்.

ஜன்னத் அல்லது ஜஹன்னம்? பாதையைத் தேர்ந்தெடுங்கள்

அல்லாஹ் (சுபஹ்) நமக்கு உண்மையான வழிகாட்டு தலை நல்கி அதில் பல எச்சரிக்கைகளையும், நற்செய்திகளையும், கவனிக்க வேண்டிய பாடங்களையும், கட்டளைகளையும் அறிவித்திருக்கிறான்.  அவன் நமக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளான். ஆனால், சுதந்திரத்தை நுண்ணறிவோடு பயன்படுத்தாதவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதையும் காண்பித்துள்ளான் (அவன் நமக்கு அறிவை அளித்திருந்தாலும், அழிக்கப்பட்ட முன் வாழ்ந்த சமுதாயங்கள் அந்த அறிவை விவேகத்துடன் பயன்படுத்தவில்லை).

இப்போது, அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றுவதா அல்லது அல்லாஹ் யாருக்கு மிகவும் அருள் செய்திருந்தானோ – நபிமார்கள், வீரமரணமடைந்தவர்கள், உண்மையாளர்கள், பக்திமான்கள் – அவர்களைப் பின்பற்றுவதா என்ற முடிவு உங்களிடம் உள்ளது. மூன்றில் எந்த பிரிவில் மறுக்கப்பட வேண்டும், எந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?  நீங்களே தேர்ந்தெடுங்கள்.

எப்படித் தொடங்குவது

சூரத்துல் வாக்கியாவை மொழிபெயர்ப்புடன் கேளுங்கள், நீங்கள் மிக நன்றாக புரிந்து கொள்வீர்கள்.

உத்வேகமிக்க வசனங்களைப் பற்றி யோசித்து, சிந்தனை செய்யுங்கள்.

நீங்கள் சேரவேண்டிய இடத்தைச் சென்றடைய திட்டமிடுங்கள் (மூன்றில் எந்தப் பிரிவில் நீங்கள் சேருவீர்கள்?)

உங்கள் பாதையை லேசாகவும், நற்கூலியளிப்பதாகவும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் யாசியுங்கள்.

தீர்மானத்துடன் இருங்கள்!

இறுதியாக, நாம் உணர வேண்டும், அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே, நாம் அனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள். நாம் பலவீனமானவர்கள். அல்லாஹ்வின் உதவியும், அனுமதியும் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது.

நாம்பலவீனமானவர்கள் என்பதை அவன் அறிவான். ஆனால், அவன் தன் படைப்புகளிலேயே மிகவும் விரும்புவதும், நல்லருட்கள் புரிவதும், விடாமல் அவனிடம் மீள்பவர்கள், அவன் மீது மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள், அவனை மட்டுமே கேட்பவர்கள், பொறுமையாகப் போராடுபவர்கள்.

அல்லாஹ் நம்முடைய பணியை எளிதாக்கி, அவனுடைய நல்லருள் பெற்ற அடியார்களில் நம்மை ஆக்குவானாக. ஆமீன்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online