إِنَّآ أَنزَلۡنَـٰهُ قُرۡءَٲنًا عَرَبِيًّ۬ا لَّعَلَّكُمۡ تَعۡقِلُون
நீங்கள் புரிந்து கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். [குர்ஆன் 12:2]
அரபியரல்லாதவர்களுக்கு, குறிப்பாக, மற்ற மொழிகள் படித்தவர்களுக்கு மன்னிப்பு இல்லை!
ஆங்கிலம் நமக்கு செல்வம், அந்தஸ்து, மற்றும் பல உலக நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பதால், நம்மில் பலர், அதில் புலமை பெற கடுமையாக உழைக்கிறோம். ஆனால் அரபியினால் இப்படிப்பட்ட பயன்கள் எதுவும் இல்லாததால், அதை அலட்சியப்படுத்துகிறோம். உலக ஆதாயம் இல்லை என்ற காரணத்திற்க்காக அரபி படிப்பதை அலட்சியப் படுத்தியிருந்தால், அல்லாஹ்வை எப்படி சந்திக்கப் போகிறோம்?
அரபியரல்லாதவர்களான நமக்கு, ஒவ்வொரு அரபி வார்த்தைக்கும் பொருள் படிக்கும் போதும் கூலி கிடைக்கும். அரபிகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை.
நண்பர்களையும், குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்து, அடிப்படை குர்ஆனிய அரபியைக் கற்றுக்கொடுக்கும் போது, நற்கூலியும் கிடைக்கும்.