அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் அகாடெமியில் பணிபுரிபவர்கள்
டாக்டர் அப்துல் அஸீஸ் அப்துர்ரஹீம், இயக்குனர்
மின்னஞ்சல்: [email protected]
சகோ: மொயின் குரைஷி
சர்வதேச விவகாரங்கள் & பொது உறவு (International Affairs & Public Relations)
மின்னஞ்சல்: [email protected]
எங்களுடைய பார்வை
நாங்கள் எந்த குறிப்பிட்ட பிரிவையும் சாராத, குர்’ஆன் மற்றும் நபிவழியின் செய்தியைப் பரப்புவதற்க்காக செயல்படும் ஒரு குழு. இந்த தளத்தில் இடம்பெறும் பெரும்பாலான பாடங்கள் டாக்டர். அப்துல் அஸீஸ் அப்துர்ரஹீம் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவர் வடிவமைத்து அளித்த குறும்பயிற்சி அனேகமாக அனைவராலும் வெகுவாக வரவேற்கப்படுகிறது. இந்த விரிவுரைகள் மற்றும் குறும்பயிற்சியின் சுருக்கமான கண்ணோட்டத்திற்கு இங்கே சொடுக்கவும்.
டாக்டர். அப்துல் அஸீஸ் அப்துர்ரஹீம் அவர்களைப்பற்றிய சிறு அறிமுகம். அவரைப் பற்றிய கல்வித் தகுதி மற்றும் ஆர்வங்களைப்பற்றி அவருடைய தற்குறிப்பு (resume) PDF ஆவணத்தில் காணலாம்.
குர்’ஆனிய தொகுப்புகள்/வெளியீடுகள்
அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் – எளிய வழியில் – ஆங்கிலம், உருது, ஹிந்தி;
குறும்பயிற்சி – அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் – எளிய வழியில் – ஆங்கிலம், உருது, ஹிந்தி;
80% குர்’ஆனிய சொற்கள் – குர்’ஆனில் அடிக்கடி வரும் சொற்களின் தொகுப்பு;
முதல் ஜுஸ்வின் சொல்லுக்கு சொல் ஆங்கில மொழிபெயர்ப்பு (உடன் பணி புரியும் 3 பேருடன்);
ஷேக் அப்துல் கரீம் பரேக்குடைய லுகதுல் குர்’ஆனை, உடன் பணி புரியும் இரண்டு பேருடன் மொழிபெயர்த்தார்.
இஸ்லாமிய பணிகள்
1991-1992: ஓக்லஹோமா பல்கலைக் கழகத்தில் (Norman, Oklahoma) முஸ்லிம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர்.
1993: தலைவர், நார்மன் இஸ்லாமிய சங்கத்தின் (Oklahoma, USA)
பல்வேறு இஸ்லாமிய தலைப்புகளில் முஸ்லிம்கள் நிறைந்த சபைகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
கல்லூரிகளிலும், அமெரிக்க, இந்திய, கிறிஸ்தவ கோவில்களிலும், மற்ற இடங்களிலும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையியே, இஸ்லாத்தைப் பற்றி, உரையாற்றியிருக்கிறார்.