அறிந்து கொள்வதற்கு செவியுறுங்கள் (கேளுங்கள்), நடைமுறைப்படுத்துவதற்கு அறிந்து கொள்ளுங்கள், கருணையைப் பெறுவதற்கு நடைமுறைப்படுத்துங்கள்
நீங்கள் செவியுற்றால், நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் அறிந்துகொண்டால், பிறகு நீங்கள் அதன்படி நடப்பீர்கள், நீங்கள் நன்றாக அதன்படி நடந்தால், அல்லாஹ் (சுபஹ்) கருணை காட்டுவான்.
அதனால் குர்ஆனைப்பற்றிப் பேசுங்கள்!
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான விஷயங்களை நீங்கள் பேசுகிறீர்கள், அதனால், குறைந்தது ஒருநிமிடமாவது குர்ஆனைப்பற்றி, நீங்கள் அதிலிருந்து இன்று என்ன படித்தீர்கள் என்பது பற்றி, அல்லது ஒரு வசனம் பற்றி அல்லது ஒரு இலக்கண விதிமுறை பற்றியெல்லாம் பேசினால் என்ன? குடும்பத்தாரிடம், நண்பர்களிடம், நம்முடன் பணி செய்பவர்களிடம் பேசுங்களேன்.
உஸ்மான் (ரலி) அவர்கள்அறிவிப்பின்படி, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர், குர்ஆனைத் தானும் கற்று பிறருக்குக் கற்றுக்கொடுப்பவரே. குர்ஆனைப்பற்றி பேசும்போது, நீங்கள் கீழ்ப்படிவது மட்டுமல்ல, நன்மைகளைக் கொடுக்கவும், பெறவும் செய்கிறீர்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்ககூடிய மிகப் பெரிய பரிசு அவர்களுக்கு, எல்லா புத்தகங்களுக்கும் தாயான குர்ஆனை உபயோகிக்கக் கற்றுக் கொடுப்பது தான். மேலும் அது நண்பர்களையும், குடும்பத்தினரையும் இஸ்லாத்திற்கு அழைக்கும் மிகச் சிறந்த வழி.
இந்தப் பொன்னான விதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
நான் செவியுறுகிறேன், நான் மறந்து விடுகிறேன்.
நான் பார்க்கிறேன், நான் நினைவில் வைத்துக் கொள்கிறேன்.
நான் பயிற்சி செய்கிறேன், நான் கற்றுக்கொள்கிறேன்.
நான் கற்றுக் கொடுக்கிறேன்,நான் தேர்ச்சி பெறுகிறேன்.