நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் மிகச் சிறந்தவர் குர்’ஆனைத் தானும் கற்று பிறருக்குக் கற்றுக் கொடுப்பவர்.’ [புகாரி] எங்களுடைய இணையதளத்தில் உள்ள பாடங்களிலிருந்து பயன் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். கிட்டத்தட்ட 0-% அரபி மொழி பேசாதவர்களுக்கு குர்’ஆனைப் புரிந்து கொள்ள முடியாது! இந்த அறியாமையைப் போக்க நாம் இணைந்து முயல்வோம். நபி (ஸல்) அவர்கள்: ‘என்னிடமிருந்து பெற்ற ஒரு வசனத்தைக் கூட அறிவித்து விடுங்கள்.’ என கூறினார்கள். . இது அவருடைய கட்டளை. இது மிகவும் பொதுவானதாக இருப்பதால், நாம் ஒரு வசனத்தை அறிந்திருந்தாலும், அதை அறிவிக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.
பதிவிறக்கங்கள்
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழிகாட்டுதல்கள்
பாடங்களின் ஒலிபெயர்ப்புகள் (Transcriptions)
சவால்:
நம்மில் பலருக்கும் குர்’ஆனைக் கற்றுக் கொடுப்பதென்றால், ஏதாவது ஆதாரமற்றதைச் சொல்லி விடுவோமோ என்ற பயம். இவ்வேலையை உங்களுக்கு எளிதாக்க, அண்டர்ஸ்டான்ட் குர்’ஆன் அகாடெமியில் நாங்கள் (இன் ஷா அல்லாஹ்) மிகவும் திறனுள்ள, குர்’ஆனைக் கற்றுக்கொடுக்க உதவும் பாடத்திட்டத்தை தயார் செய்துள்ளோம். நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய பாடப்புத்தகமும், பவர் பாயின்ட் கோப்புகளும் உள்ளன. இப்போது ஒலிபெயர்ப்பு கோப்புகளும் உள்ளன. இப்போது நீங்கள் முழு விரிவுரையையும் படித்து, உங்களைத் தயார் செய்து கொண்டு, வகுப்பு எடுக்கும் பயிற்சியை பவர் பாயின்ட் கோப்புகளை ஒரு படம் காட்டும் கருவி (projector) அல்லது ஒரு பெரிய திரையின் மூலம் பழகுங்கள்.
இது இன் ஷா அல்லாஹ், மற்ற முறைகளை விட சிறந்தது, ஏனென்றால், நாங்கள் உரை(text), படவில்லைகள்(slides), காணொளிகள் (videos) இவற்றுடன் சீராக தொடங்குவதால், எல்லா ஆசிரியர்களும் செய்ய வேண்டியது, கற்றவற்றை மீண்டும் அளிக்க வேண்டியது தான். இந்த கல்வி முறையினால், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தொடங்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். அத்தோடு, குர்’ஆனைச் சொல்லிக் கொடுப்பதை விட சிறந்ததாக வேறு என்ன அருள் இருக்க முடியும்? மேலும், ஒருவர் அம்மாதிரி 10 பாடங்களை எடுத்து விட்டால், இன் ஷா அல்லாஹ், அவருக்கு எந்த தலைப்பில் வேண்டுமானாலும் பேச தைரியம் வந்து விடும் (அவர் பேச வேண்டிய உரையை நன்றாக தயார் செய்திருந்தால் மட்டுமே).
எங்களுடைய இரு பயிற்சி மையங்களில் இதை செயல்படுத்த ஆரம்பித்தோம். முடிவுகள், அல்ஹம்துலில்லாஹ், மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இதை ஒரு குழு முயற்சியாக, இங்கு குறிப்பிட்டுள்ள முறையில், புது ஆசிரியர்களுக்கு மிகவும் திறமையாக பயிற்சியளிக்கலாம்.
- Dr. Abdulazeez Abdulraheem..