என்ன? உங்களுக்கு குர்ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால் நீங்கள் மிகவும் ‘பிசி’ அல்லது குர்ஆனைப் படிப்பது மிகவும் கடினம் என்று நீனைக்கிறீர்களா?
அப்படியானால் இது தான் உங்களுக்கு மிகச்சரியான வகுப்பு!
அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, துபை, சௌதி அரேபியா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள், சிறுவர்களுக்கு எங்களுடைய இந்த புகழ் பெற்ற படிப்பு நேரடியாகவும், கணினி வழியாகவும் வழங்கப்படுகிறது. உலகம் முழுதும் எங்களுக்கு மாணவர்கள் இருக்கிறார்கள்.
ஒன்பதே மணி நேரத்தில் குர்ஆனின் 50%!
நீங்கள் மொத்தம் படிக்கப்போவது 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 9 மணி நேரம். அதில் நீங்கள் (குர்ஆனில் உள்ள சுமார் 78000 சொற்களில்) 40,000 முறை வரக்கூடிய 125 வார்த்தைகளைக் கற்றுக்கொள்வீர்கள். அது 50%க்கு சமம்.
அப்படியானால், நீங்கள் இந்தப் படிப்பை முடிக்கும் போது குர்ஆனின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சொற்களில் பாதிக்குப் பொருள் அறிவீர்கள்!
நீங்கள் என்ன படிப்பீர்கள்?
அரபியை புரிந்து கொள்வதற்கு எளிதான வழி தொழுகை என்பதைக் கண்டு பிடித்தோம். உங்களுக்கு ஏற்கனவே அரபி உரை தெரியும் என்பதால் தினமும் நீங்கள் படிப்பதை தொழுகையில் பயிற்சி செய்யலாம்! நீங்கள் முடிக்கக் கூடியது:
சூரா ஃபாத்திஹா மற்றும் குர்ஆனின் இறுதி 6 அத்தியாயங்கள்
தொழுகையின்வேறுபட்டநிலைகள்
அவசியமானஅடிப்படைஇலக்கணம்
பிரத்தியேகமானது: ஒவ்வொரு பகுதியிலும் ஈமானை உயர்த்தக்கூடிய தனித்தன்மையுள்ள பாடங்கள்.
இந்த படிப்பின் நோக்கம் என்ன?
நீங்கள் தினமும் ஓதக்கூடியவற்றை (தொழுகையிலும் மற்ற சமயத்திலும்) புரிந்து ஓதுதல் – இது தொழுகையில் உங்களுடைய கவனத்தையும் அல்லாஹ்வுடன் உங்களுக்குள்ள தொடர்பையும் வெகுவாக முன்னேற்றும்.
குர்ஆன் வைத்திருப்பதற்கு நல்ல பொருள் மட்டுமல்ல – அது, கண்டிப்பாக பெற வேண்டிய வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டி.
குர்ஆனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்ற உங்களுடைய எண்ணத்தை நிரந்தரமாகப் போக்குவது. இப்போது உங்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள பாதி சொற்கள் புரியும்போது, 100% குர்ஆனைப்புரிய ஆரம்பிப்பது மிகவும் எளிது!
இந்த வகுப்பின் பயன்கள் என்ன?
உங்களுடைய குர்ஆன் தொடர்புடைய எல்லா செயல்களுக்கும் முன்னுரிமை அளிப்பதற்கு தேவையான முக்கியமான சூத்திரம்!
நீங்கள் மிக விரைவாக படிப்பதற்கு உத்திரவாதம் அளிக்க வல்ல சக்தி வாய்ந்த, ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கிய அணுகு முறை
‘எவ்வாறு’என்ற பாடங்கள் உள்ளன. தொடர்பு கொள்ளுங்கள், கற்பனை செய்யுங்கள்,
இலக்கணம் கற்றுக்கொள்ள புரட்சிகரகமான யுத்தி; முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாடு- TPI (Total Physical Interaction)
இயன்றவரை எல்லாவிதமான கல்விச்சாதனங்களும் அளிக்கப்படும்: ஒளிப்படங்கள், எம்பி 3 (mp3),பவர் பாயின்ட் கோப்புகள், பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், மின்னஞ்சல் நினைவூட்டல்கள், சிறப்பு வினா விடைகள் மற்றும் ஒரு இறுதித் தேர்வு.