குர்ஆனின் 70% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் ‘குர்ஆனின் 50% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்’என்ற பாடப்பிரிவை முடித்து விட்டீர்களா? அப்படியானால் இந்த வகுப்புக்குத் தொடருங்கள்!

அடிப்படை பாடப்பிரிவிலிருந்து பிரித்தெடுத்து, மேம்படுத்தப்பட்ட புதிய பாடப்பிரிவுகளே இவை இரண்டும் (50%, 70% சொற்கள்). குர்ஆனைப் புரிந்து கொள்வதில் உங்களுடைய முயற்சிக்கு இவை மிகச்சரியான ஆரம்பம்.

இவ்விரண்டு பாடங்களையும் முடித்த பிறகு நீங்கள் குர்ஆனை நேரடியாகத் தொடரலாம். அடிப்படை பாடத்திட்டத்தை படிக்க அவசியமில்லை.

அடுத்த 9 மணி நேரத்தில் குர்ஆனின் 70% வார்த்தைகள்

(‘குர்ஆனின் 50% புரிந்து கொள்ளுங்கள்’ பாடத்திட்டத்தில் 1லிருந்து 19 வரை பாடங்கள் உள்ளன) இதில் பாடங்கள் 20லிருந்து 39 வரை இலக்கமிடப்பட்டுள்ளன. சுமார் 30 நிமிட வகுப்புகளாகப் பிரிக்கப்பட்ட 20 அமர்வுகளாக மொத்தம் 9 மணி நேரம் படிப்பீர்கள் (20 x 30 Minitues = 10 Hrs). இதனால், தினமும் நீங்கள் ஒரு பகுதியைப் படிக்கலாம்.

இந்த இரண்டு பாடத்திட்டங்களையும் முடித்த பிறகு நீங்கள் குர்ஆனில் 55,000 முறை (குர்ஆனில் உள்ள சுமார் 78000 சொற்களில்) வரக்கூடிய ஏறக்குறைய 250 வார்த்தைகளைக் கற்றுக் கொள்வீர்கள். அது சுமார் 70% ஆகும்!

அதனால், இந்த பாடத்தை முடித்த பின் குர்ஆனின் ஒரு வரியில் இரண்டு வார்த்தைகள் மட்டுமே உங்களுக்கு புதிதாக இருக்கும். உண்மையில் நீங்கள் தொடரும்போது இன்னும் குறைவாகக் கூட இருக்கும்.

நீங்கள் என்ன படிப்பீர்கள்?

நீங்கள் எளிதாக குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக, தினசரி பயிற்சியுடன், இந்த பாடத்திட்டத்தில் முடிக்கப் போவது:

இன்னும் சில சிறிய சூராக்கள்;

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்;

‘ஆயத்துல் குர்ஸி’, சூரா அல் ஹஷ்ரின் இறுதிப் பகுதி போன்ற முக்கியமான ஓதல்கள்;

குர்ஆனுடைய மற்ற மிகப் பயனுள்ள பகுதிகள்;

தேவையான இலக்கணம்;

பிரத்தியேகமானது: ஒவ்வொரு பகுதியிலும் ஈமானை உயர்த்தக்கூடிய தனித்தன்மையுள்ள பாடங்கள்.

மேலே தேர்ந்தெடுத்த பகுதிகளின் மூலம் நீங்கள் குர்ஆனில் 15,000 முறை வரக்கூடிய ஏறக்குறைய 140 வார்த்தைகளைக் கற்றுக் கொள்வீர்கள்! இதை பாடத்திட்டம் ஒன்றில் நீங்கள் படித்த வார்த்தைகளோடு (40000 முறை வரக்கூடிய 125 சொற்கள்) சேர்த்தால் மொத்தம் 55,000 முறை அல்லது 70% ஆகும்.

இந்த படிப்பின் நோக்கம் என்ன?

நீங்கள் தினமும் ஓதக்கூடிய ஆயத்துக்களும், துவாக்களும் புரிதலோடு விரிவடையும். இது உங்களுடைய தொழுகையிலும் அல்லாஹ்வுடன் உங்களுடைய தொடர்பிலும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும்.

குர்ஆன் வைத்திருப்பதற்கு நல்ல பொருள் மட்டுமல்ல – அது, கண்டிப்பாக பெற வேண்டிய வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டி.

குர்ஆனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்ற உங்களுடைய எண்ணத்தை நிரந்தரமாகப் போக்குவது.

இப்போது உங்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள 70% சொற்கள் புரியும்போது, ஏறக்குறைய குர்ஆன் முழுவதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறீர்கள்.

இந்த வகுப்பின் பயன்கள் என்ன?

உங்களுடைய குர்ஆன் சம்பந்தப்பட்ட எல்லா செயல்களுக்கும் முன்னுரிமை அளிப்பதற்கு தேவையான முக்கியமான சூத்திரம்!

நீங்கள் மிக விரைவாக படிப்பதற்கு உத்திரவாதம் அளிக்க வல்ல சக்தி வாய்ந்த, ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கிய அணுகு முறை

‘எவ்வாறு’என்ற பாடங்கள் உள்ளன. தொடர்பு கொள்ள, கற்பனை செய்ய, உணர, குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்.

இலக்கணம் கற்றுக்கொள்ள புரட்சிகரகமான யுத்தி; குர்ஆனில் 9000 முறை வரக்கூடிய வினைச்சொற்களிலிருந்து பெறப்பட்ட வடிவங்களை (derived forms of verbs)முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாட்டு (TPI-Total Physical Interaction)முறையில் கற்பித்தல். அதாவது, கிட்டத்தட்ட குர்ஆனின் ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல்.

இயன்றவரை எல்லா விதமான கல்விச் சாதனங்களும் அளிக்கப்படும்: ஒளிப்படங்கள், எம்பி 3 (mp3), பவர் பாயின்ட் கோப்புகள், பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், மின்னஞ்சல் நினைவூட்டல்கள், சிறப்பு வினா விடைகள் மற்றும் ஒரு இறுதித் தேர்வு.

குர்ஆனிலுள்ள புதிய சொற்களின் குறிப்பு

பின்வரும் வரைபடம் ஒவ்வொரு பாரா (ஜுஸ்) விலும் உள்ள புதிய வார்த்தைகளை அளிக்கிற்து. இதிலிருந்து நீங்கள் எளிதாக குர்ஆனில் ஒவ்வொரு ஜுஸ்விலும் உள்ள புதிய சொற்கள் எத்தனை என்று சொல்லலாம்:

முதல் ஜுஸ்வில் ஒவ்வொரு பக்கத்திலும் 20 சொற்கள்.

2லிருந்து5 வரை ஒவ்வொரு பக்கத்திலும் 12 சொற்கள்.

6 லிருந்து28 வரை ஒவ்வொரு பக்கத்திலும் 6 சொற்கள்.

29 லிருந்து30 வரை ஒவ்வொரு பக்கத்திலும் 12 சொற்கள்.

குர்ஆனைப் புரிந்து கொள்வது எளிதா இல்லையா?

அதனால் தொடங்குங்கள், உண்மையாக இருங்கள்.. இன்ஷா அல்லாஹ், விரைவில் உங்களால் முழு குர்ஆனையும் புரிந்து கொள்ள முடியும்! இந்த பாடத்திட்டதைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், எங்களுடைய மன்றத்தில் இணைந்து மற்ற மாணவர்களைச் சந்தியுங்கள்.

முன் நிபந்தனை: இந்த வகுப்பில் சேர வேண்டுமானால், உங்களுக்கு அரபிபடிக்கத்தெரிந்திருக்க வேண்டும், ‘குர்ஆனின் 50% வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்’ பாடத்திட்ட்த்தை முடித்திருக்க வேண்டும்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online