உலகில் மிகவும் அதிகமாகப் படிக்கப்படும் புத்தகம் குர்’ஆன். ஏழாவது நூற்றாண்டில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட, இறைவனின் இறுதி வேதமும் அத்தாட்சியும் என எல்லா நாட்டு முஸ்லிம்களாலும் மிகவும் புனிதமாக கருதப்படுவதோடு, அவர்களால், மிகவும் பிரியத்துடன் ஓதப்படுவதும், மனப்பாடம் செய்யப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் இந்த குர்’ஆன். .
விசுவாசிகள், குறிப்பாக சப்தமாக ஓதப்படும்போது, குர்’ஆனின் சொல்வளம் மற்றும் கவித்துவத்தினால், ஊக்கமும் ஆறுதலும் பெற்று, நெகிழ்ந்து, பல சமயங்களில், கண்ணீர் விடுவார்கள். மேலும், குர்’ஆன் மட்டும் தான், அதனுடைய உரை மிகக்கவனமாக பாதுகாக்கப்பட்டு, ஒரே ஒரு அதிகாரபூர்வமான அரபி பதிப்பாக, அறிவியல் பிழைகள் எதுவுமின்றி, அதனுடைய சரித்திர நம்பகத்தன்மை சரிபார்க்கப்படக்கூடியதாக இருக்கிறது. தோராயமாக, புதிய ஏற்பாட்டின் நீளம் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், எந்த அறிவுத்திறன் கொண்டவராக இருந்தாலும் – அரபி மொழி பேசாதவராக இருந்தாலும், முழுவதும் மனப்பாடம் செய்யக் கூடிய ஒரே வேதமாக குர்’ஆன் இருப்பதை முஸ்லிம்கள் அதனுடைய அற்புதங்களில் ஒன்று என எண்ணுகிறார்கள்.