100% செலுத்திய கட்டணத்தைத் திரும்பப்பெறல் – நம்பிக்கையுடன் வாங்குங்கள்
குர்’ஆன் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு புரட்சிகரமான வழி
உடனடி மற்றும் எல்லா படிப்புகளுக்கும் நுழைய எல்லையற்ற அனுமதி
இலவசம் – அதிகரிக்கும் குர்’ஆன் தொடர்பான வளங்கள்
இலவசம் – இணைப்பில் குர்’ஆனின் சொல்லுக்குச் சொல் பொருள்
ஐஃபோன் ஆப் (iPhone App) சேர்க்கப்பட்டுள்ளது
வாராந்திர கல்வி மற்றும் உற்சாகக் குறிப்புகள்
கட்டணம் செலுத்துவதற்கு முன் பயன்படுத்தி பார்க்க விரும்புகிறீர்களா?
15 நாட்கள் இலவச முன்னோட்ட வகுப்புகளைப் பெறுங்கள்
கட்டணம் செலுத்த இயலாத நிலையில் நீங்கள் இருந்தால் அல்லது நீங்கள் ஒரு முஸ்லிம் அல்லாதவராக இருந்து குர்’ஆன் கற்க விரும்பினால், நீங்கள் இலவச நுழைவு அனுமதியை இங்கே பெறுங்கள்.
இலவச நுழைவு அனுமதி
உங்களுக்கு குர்’ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால், உங்களுக்கு அரபி படிக்கத் தெரியாது அல்லவா? அப்படியானால், இது தான் உங்களுக்கு உகந்த முழுமையான வகுப்பு.
முற்றிலும் தனித்துவமிக்க, மிக எளிதான முறையில் உலக முழுதும் குர்’ஆன் ஓதக் கற்றுக்கொடுக்க, நாங்கள் மிகவும் புதிதாக உருவாக்கிய பாடத்திட்டம் இது.
பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் அவரவருக்கு வசதியான நேரத்தில் படிக்கலாம்.
இருபதே மணி நேரத்தில் குர்’ஆன் படிக்க கற்றுக் கொள்ளுங்கள்
50 வகுப்புகளாகப் பிரிக்கப் பட்ட மொத்தம் 20 மணி நேரத்தில் நீங்கள், தஜ்வீத் சட்டங்களோடு அரபியைப் படிக்கவும், எழுதவும், ஒரு புரட்சிகரமான வழியில் கற்றுக் கொள்வீர்கள்.
நாங்கள் குர்’ஆனில் 50% (சுமார் 78,000 சொற்களில்) அல்லது 40,000 முறை இடம் பெறும் 350 முக்கியமான சொற்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த சொற்களை பொருத்தமான பாடங்களில் இடம் பெறும்படி செய்திருக்கிறோம். அதனால், இந்த பாடத்திட்டத்தை முடிக்கும்போது உங்களால், 50% குர்’ஆனிய சொற்களை தஜ்வீதுடன் ஓத முடியும்.
அதனுடன், நாங்கள் சுமார் 40% (சுமார் 78,000 சொற்களில்) அல்லது 30,000 முறை இடம்பெறக்கூடிய 130 முக்கியமான சொற்களையும் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த சொற்களை எழுதவும், அவற்றின் அர்த்தங்களை மனப்பாடம் செய்யவும் உற்சாகம் அளிக்கிறோம். அதனால், நீங்கள் இந்த வகுப்பை முடிக்கும்போது, உங்களால் குர்’ஆனின் 40% சொற்க்களைப் புரிந்து கொள்ள முடியும்!
நீங்கள் என்ன படிப்பீர்கள்?
பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பின் நம் நிபுணர் குழுவினர் குர்’ஆனை ஓத ஒரு முழுமையான வழியை அறிவியல் அணுகுமுறையோடு வடிவமைத்திருக்கிறார்கள். எழுத்துக்களை, வழக்கமான அ, ஆ, இ அல்லது அலிஃப், பே, தே என்ற வரிசையில் இல்லாமல், அவற்றின் தெளிவான ஒலி எழும்புமைய (மஹாரிஜ்) வரிசையில், அவற்றை தினசரி நாம் உபயோகிக்கும் பொருட்களோடு தொடர்பு படுத்தி கற்றுக்கொள்வீர்கள்.
பிறகு, குர்’ஆனில் அதிக முறை வரக்கூடிய சொற்களை அவற்றின் தஜ்வீத் சட்டத்துடன் பழகுவீர்கள்.
இப்பாடத்திட்டத்தில் நீங்கள் படிக்கக் கூடியவை:
அரபி எழுத்துக்கள் 29ஐயும் அவைகளுடைய சரியான ஒலியுடன் உங்களுடைய விரல்களை பயன்படுத்தி மிக எளிதாகக் கற்றுக்கொள்ள உதவும் பிரத்தியேகமான ‘எழுத்து பாட்டு’.
சைகைகளுடன் கூடிய எதுகை மோனை – எழுத்துக்களிலிருந்து நீங்கள் அவற்றின் ஓசையுடைய குர்’ஆனிய சொற்களைப் பழகும்போது அவை உங்களுக்கு எழுத்துக்களுடன் இணைப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுப்பதோடு, உங்களுடைய குர்’அனின் புரிதலையும் அதிகரிக்கும்.
தர்க்க ரீதியான தஜ்வீத் சட்டங்கள் – எளிமைப்படுத்தப் பட்ட பெயர்களோடு இந்த மஹாரிஜ் குழுக்களை இயற்கையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மிக எளிதாக விளக்கப்படுகிறது.
அடிப்படை பேச்சு அரபியும், அரபி மொழியைப் பற்றிய வியக்கத்தக்க தகவல்களும்
படிப்படியாக சவாலாக இருக்கக் கூடிய பயிற்சிகள்
இந்த வகுப்பின் நோக்கம் என்ன?
குர்’ஆனை நீங்கள் சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியுடன் ஓதத் தொடங்குவது.
ஆரம்பத்திலிருந்தே சரியான ஒலியுடன் ஓதக்கூடிய ஆற்றல், சாதாரணமாக ‘அலிஃப், பா, தா’ முறையில் கற்றுக் கொள்பவர்களை விட உங்களுக்கு ஒரு பெரிய வேகமான தொடக்கத்தைக் கொடுக்கும்.
40% குர்’ஆனிய சொற்களை பொருளோடு கற்றுக்கொள்வது குர்’ஆனுடன் உங்களுக்குள்ள நெருக்கத்தை பெரும் அளவில் அதிகரிக்கும்.
தஜ்வீத் சட்டங்களை பயன்படுத்தவும், இந்த வகுப்பிலேயே 50% குர்’ஆனிய சொற்களில் அவற்றை உபயோகிக்கவும் உதவும்.
அரபியை படிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்வது தான் நீங்கள் இதுவரை கற்றவற்றிலேயே மிகச் சிறந்தது என்று உங்களுக்கு காட்டுவது.
இப்போது உங்களுக்கு குர்’ஆனைப் படிக்கத் தெரிவதால், நீங்கள் குர்’ஆனை அரபியில் புரிந்து கொள்ளும் உலகில் நுழையலாம்.!
இந்த வகுப்பின் பலன்கள் என்ன?
குர்’ஆனை ஆரம்பத்திலிருந்து படிக்கக் கற்றுக்கொள்ள, தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சூத்திரம்.
அரபி எழுத்துக்களை, சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியுடன், மிக நன்றாக கற்றுக்கொள்ள முழுமையான வழியான ‘எழுத்துப் பாட்டு’ அடங்கியுள்ளது.
ஆய்வின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட திறன் மிக்க அணுகுமுறை. மிக வேகமாக நீங்கள் கற்றுக் கொள்வதையும், மனப்பாடம் செய்வதையும் உறுதி செய்வதற்க்காக, பொருட்களுடன் சொற்களை தொடர்பு படுத்துதல், சைகைகள், பாடல்கள்.
40க்கு மேலான அம்சங்களுடன் கூடிய புரட்சிகரமான கற்பிக்கும் முறை – எழுத்துகள், அவற்றின் ஒலி பிறக்கும் இடங்கள், ஓதும் தன்மைகள், எழுதுதல், சொற்களைப் புரிந்து கொள்ளுதல், ஓதுதலின் சட்டங்கள்.
குர்’ஆனில் உள்ள சொற்களில் 50% மிக முக்கியமானவற்றின் பயிற்சி.
பேச்சு அரபியையும் அரபி மொழியின் தகவல்களையும் ரசிக்கலாம்.
இயன்றவரை எல்லாவிதமான கல்விச் சாதனங்களும் கொடுக்கப்படும். காணொளிகள் (விடியோக்கள்), எம்.பி.3 (mp3), பவர் பாயின்ட் கோப்புகள் (PowerPoint files), பாடப்புத்தகம், பயிற்சி புத்தகம், மின்னஞ்சல் நினைவூட்டல்கள், சிறப்பு வினாடி வினாக்கள் மற்றும் இறுதித் தேர்வு.
12 Comments
-
How to signup here. I didnt get an confirmation mail yet
-
check you spam also
-
-
Salaam Alaikkum,
I already have a subscription for one year in UQA Tamil web site. Can I use same login in android app. Please confirm.
Zaakkallahu Khairan.
-
Author
Salaam,
Yes brother you can use the same login pls follow the instructions mentioned below
1.visit http://www.understandqurantamil.com/
2.In the Existing User Login box type your username and password
3.Press Submit button
You can access your course
-
-
Hi, salam alaikum
please confirm how to signup here
how to get the enrollment key?
-
Author
Wa alaikum assalaam
You have to purchase the enrolment key from us.
For more details, contact us @ +91 98840 12443
-
-
Assalamu Alaikum, I want to join the Understanding quran tamil full course, I am living outside India, can u advise me how to join?
-
Author
Wa alaikum assalaam
You can purchase our eLearning Card in which you can learn all 3 courses by watching the videos.
For more details, contact us @ +91 98840 12443
-
-
I want to pursue this course how can i
-
Author
You can purchase our eLearning Card in which you can learn all 3 courses by watching the videos.
For more details, contact us @ +91 98840 12443
-
-
This course is really useful to me. It gives me immense pleasure to pursue this course. May the Almighty Allah will give you the reward for teaching all the Arabic in a Noval way.
-
Author
jazakallah khairan for your support. Please share about us with your friends and relatives
-