குர்ஆன்

உலகத்திலேயே மிக அதிகமாக படிக்கப்படும் நூல் குர்ஆன். இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு 7வது நூற்றாண்டில் அருளப்பட்ட இந்நூல் முஸ்லிம்களால் இறைவனின்  இறுதி வேதமாகவும், சாசனமாகவும் புனிதமாகக் கருதப்படுவதோடு, எக்காலத்திலும் எல்லா தேசத்திலுமுள்ள முஸ்லிம்களால், இதன் வசனங்கள் விருப்பத்துடன் ஓதப்படுகின்றன, மனனம் செய்யப்படுகின்றன, கடைபிடிக்கப்படுகின்றன.

குர்ஆன், குறிப்பாக, உரக்க ஓதப்படும்போது அதன்  சொல்லாட்சி, கவித்துவம், இவற்றால் நம்பிக்கையாளர்கள் உற்சாகம் அடைவதோடு, ஆறுதல் பெற்று, மனமுறுகி கண்ணீர் சிந்துவார்கள்! மேலும், குர்ஆன் மட்டுமே அறிவியல் ரீதியான தவறுகளுக்கு அப்பாற்பட்டதாகவும், அதனுடைய பூர்வாங்க/சரித்திர ஆதாரம்  (historical authenticity) சரிபார்க்கக்கூடியதாகவும், அதன் உரை (text) மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டதாகவும் இருப்பதால், அங்கீகாரம் பெற்ற பதிப்பு (அரபியில்) ஒன்று மட்டுமே உள்ளது. சுமாராக ‘புதிய ஏற்பாட்டின்’அளவு இருந்தாலும், குர்ஆன் மட்டுமே எவ்வயதினராக இருந்தாலும், எந்த அறிவுத்திறன் பெற்றவராக இருந்தாலும் – அரபி மொழி பேசாதவராக இருந்தாலும் – முழுமையாக மனப்பாடம் செய்யப்படுகிறது – இதை முஸ்லிம்கள் குர்ஆனுடைய ஒரு அற்புதமாகக் கருதுகிறார்கள்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online