குர்ஆனைப்புரிந்து கொள்ளுங்கள் சிறுவர் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம்!
சிறுவர்களுக்கு எளிய வழியில் குர்ஆனைப்புரிந்து கொள்ள கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், தினமும் ஒதக்கூடிய இறை வசனங்களின் அடிப்படையில் உள்ள, ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கான இந்த எளிய தொடக்க பாடம் ஒரு சிறப்பான வழி!
இப்படிப்பு, சுமார் 20 நிமிடங்கள் கால அளவைக்கொண்ட 20 அமர்வுகளைக் கொண்டு மொத்தம் 9 மணி நேரத்தில் முடிக்கப்படும்.
சிறு மாணவன் என்ன கற்றுக் கொள்வான்?
அரபியை புரிந்து கொள்வதற்கு எளிதான வழி தொழுகை என்பதைக் கண்டு பிடித்தோம். இதனால் தினசரி பயிற்சிக்கும் உத்திரவாதம்.
அது தான் சிறுவர் படிப்பின் தனிச்சிறப்பு; சிறு மாணவன்/மாணவி அரபி படிப்பது மட்டுமல்லாமல் தம் இஸ்லாமிய கல்வியின் அடிப்படையையும் கற்பார்கள். இப்படிப்பட்ட சேர்க்கையை வேறு எந்த படிப்பிலும் காண இயலாது!
நாங்கள் முடிக்கப்போவது:
தினமும் ஓதக்கூடிய சூரா அல் ஃபாத்திஹாவும் குர்ஆனின் இறுதி 3 சூராக்களும்;
தொழுகையின் சாதாரண பகுதிகள்;
சுறுக்கமான தினசரி பிரார்த்தனைகள்;
சாதாரணமான, எழுச்சி மிக்க முறையில், அவசியமான அடிப்படை இலக்கணம்!
இந்த படிப்பின் நோக்கம் என்ன?
சிறுவன் தொழுகையிலும் மற்ற நேரத்திலும் தினசரி ஓதக்கூடியவற்றைப் புரிந்து ஓதத்தொடங்குவான்.
இது தூயோனான அல்லாஹ்வுடன் அவர்களுக்குள்ள உறவுக்கு, அவர்களுடைய வாழ்க்கை முழுதிற்கும் தேவையான ஒரு உறுதியான அடித்தளம் உண்டாக்கும்!
குர்ஆன் புரிந்து கொள்வதற்கு கடினமானது என்ற் குழந்தையின் எண்ணத்தை நிரந்தரமாக போக்குவது; அவர்கள் சந்தித்த நேர்மறையான குர்ஆன் அனுபவம், இன்ஷா அல்லாஹ், அவர்களுக்கு எதிர்காலத்தில் குர்ஆனை விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கற்கும் நம்பிக்கையைக் அளிக்கும்!