எங்களுடைய குறிக்கோள்
நாங்கள் வித்தியாசமானவர்கள். அண்டர்ஸ்டாண்ட் குர்’ஆன் அகாடெமியில், நாங்கள் குர்’ஆனை ஓதுவதில் மட்டுமல்லாமல், அதன் பொருளைப் புரிந்து கொள்ளுதல், நம் அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்துதல், இறைவன் நாடினால், அதை நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குக் கற்றுக்கொடுத்தல் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மேலும், எங்களுடைய மாணவர்கள் வகுப்புகளைத் தொடங்குவதோடு அதை முடிக்கவும் வேண்டும் என நாங்கள் விரும்புவதால், குர்’ஆனைக் கற்பது எல்லா மாணவர்களுக்கும், எளிதாகவும், சக மாணவர்களுடன் கலந்து ஊடாடுவதாகவும், முழுமையாக ஈடுபடுத்தக்கூடியதாகவும், கேளிக்கை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைக்கிறோம்.இந்த மனப்பாங்கை நீங்கள் கீழேயுள்ள எங்களுடைய எல்லா தீர்வுகளிலும் காண்பீர்கள்.
தீர்வுகள்
இணைப்பில் பாடங்கள் (online courses)
நீங்களும் உங்கள் பிள்ளைகளும், குர்’ஆனைப் படிப்பது மட்டுமல்ல, அதையும் ஐவேளைத் தொழுகையையும் எளிதாகப் புரிந்து கொள்ளவும், நாங்கள் புரட்சிகரமான வகுப்புகளை இணையத்தில் அளிக்கிறோம். இந்த வகுப்புகளுக்குப் பின், அல்லாஹ்வுடன் உங்களுக்குள்ள தொடர்பு நிச்சயமாக அதற்கு முன் இருந்தது போலிருக்காது, இன் ஷா அல்லாஹ்.