பாங்கு(Adhan) பயிலரங்கு

இந்த பயிலரங்கத்தின் குறிக்கோள்:

மக்களுக்கு பாங்கின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துதல்

அதானுடைய வார்த்தைகளுடைய பொருளையும், அவற்றின் தாத்பரியத்தையும்  விளக்குதல்

அதை எப்படி சொல்வது என்று மக்களுக்கு கற்றுக் கொடுப்பது.

அதான் ஏன் அழகாக/ இனிமையாக இருக்க வேண்டும்?

அமைதி அளிக்கக்கூடிய, இதமான, இனிமையான ஓசைகளைக் கேட்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். வெறுக்கத்தக்க ஓசை நம் காதுகளில் விழுந்தால், நாம் உடனே அதைக் கேட்பதைத் தவிர்க்கமுயல்கிறோம், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், கேட்கும்படி ஆனால், அவ்வோசை நம் காதுகளைத் தாண்டி உள்ளே போகாது– இந்த நியதியோடுதான் அல்லாஹ் நம்மைப் படைத்துள்ளான்.

‘அதான்’ அழகாக இருந்தால், அதில் ஈர்க்கப்பட்டு அரிதாக பள்ளிவாசலுக்குச் செல்லும் ஒருவர் பள்ளிக்குச் செல்லக்கூடும், அதன் மூலம் இன்ஷா அல்லாஹ், அவர் மற்ற வழிபாடுகளுக்கும் நெருக்கமாகக்கூடும்.

இது இசைக்கு ஒரு சிறந்த மாற்றுவழி!! மற்ற நேரங்களில் தாழ்ந்த குரலில் வாய்க்குள் முணு முணுப்பதற்க்கும், இசைப்பதற்கும் ஏற்றது மட்டுமல்லாமல், தூயோனான அல்லாஹ்வைப் புகழ்வதால் அச்செயலுக்காக நற்கூலியையும் பெற்றுத் தரக்கூடியது.

மிகச் சிறந்த பாங்கு கேட்பவர் மனதை ஊடுருவிச் செல்லும். அதன் மூலம் அந்த முஸ்லிமுக்கு தொழுகையில் அதிக ஆர்வம் ஏற்படும்.

ஒழுங்கில்லாத பாங்கு ஒரு முஸ்லிமின் மேல் ஏற்படுத்தும் விளைவுகளும்/ முடிவுகளும்

அது ஒரு முஸ்லிமுக்கு தவறான செய்திகளை அனுப்புகிறது. ஒரு படித்த, நவீன இளைஞனுக்கு, முக்கியமாக அவன் தன் முஸ்லிமல்லாத நண்பர்களுடன் இருக்கும் போது, அது அவனை அசௌகரியப்படுத்துவதோடு, தர்ம சங்கடமாகவும், பின் தங்கியுள்ளது போலவும் உணர வைக்கும்.

தொழத் தூண்டும் ஆன்மீக  எழுச்சி எதையும் ஏற்படுத்தாது.

அவர்களை இஸ்லாத்தை விட்டே வெளியாக்கிவிடும்!

படித்த இளைஞர்களிடையே ஏன் உற்சாகம் இல்லை?

முன் மாதிரிகள் இல்லை (பாங்கு சொல்லக்கூடிய பேராசிரியர்களோ, பொறியாளர்களோ, மருத்துவர்களோ இல்லை).

வீட்டுப்பாடம்:

நாம் அனைவரும் நம்முடைய பள்ளிகளில், அலுவலகங்களில், மற்றும் எல்லா இடங்களிலும் பாங்கு சொல்ல வேண்டும்.  அதன் மூலம் நீங்கள் பலருக்கு ஊக்கமளிக்கலாம்!

காத்திருக்காதீர்கள், கேளுங்கள்!

அதான் பயிலரங்கங்களை பரவலாக நடத்துங்கள்.

இனிமையான பாங்கின் மூலம் முஸ்லிமல்லதவர் அடையக்கூடிய எண்ணற்ற பலன்கள்

இது இஸ்லாமிய அழைப்புக்கு ஒரு மூலம்.  இஸ்லாமைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஏற்படும் முதல் நல்லபிப்ராயம்.

“முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்”  சற்றே கற்பனை செய்து பாருங்கள், ஒரு அழகான பாங்கைக் கேட்கும்போது, அவர்கள் அதைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், மெதுவாக அதை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.

முஸ்லிம்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் ஏதேனும் அவர்கள் மனதில் இருந்தால் அதைக் களைவதோடு, அவர்களை இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கும்

.

அனைவருக்கும் பகிரங்கமான, தன்னியக்க  அழைப்பு.

முஸ்லிம்களுடைய கருத்து

மக்கா/மதினாவை நினைவூட்டுகிறது.

சில சமயம் அது பொன்னான நினைவுகளை ஏற்படுத்துவதோடு கண்களில் கண்ணீரையும் வரவழைக்கிறது.  அகிலம் முழுதும் பலருடைய இதயங்களைத் தொட்டிருக்கிறது.

இத்தனை அழகிய அழைப்புக்கு பதிலளிக்காமலிருக்க யாருக்கு மனம் வரும்?

இனிய பாங்கோசையினால் மக்கள் இஸ்லாமை நெருங்கியிருக்கிறார்கள்.

Downloads

Sr    File Name   File Type Size
1 Introduction to Azan 1 Power Point Presentation 606 KB
2 Introduction to Azan 2 PowerPoint presentation 720 KB
3 Introduction to Azan 3 Windows Media player file 19 MB
4 Message of Azan Windows Media player file 29.5 MB
5 Answering Azan Windows Media player file 19.6 MB
6 How to give the Azan Windows Media player file 16.8 MB
7 Azan Practice Session 1 Windows Media player file 6.6 MB
8 Azan Practice Session 2 Windows Media player file 72 MB
9 Azan Practice Sessions 3 Windows Media player file 6.6 MB

New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online