குர்ஆனின் மேல் பிரியத்தை ஏற்படுத்தவும், அதை குழந்தைகளிடம் இளம்பருவத்திலேயே பதித்திடவும், அவர்கள் குர்’ ஆனுடன் நேரடியாக தொடர்பு படுத்த, இது சில சாதனங்களின் மூலம் உதவுகிறது.
பின்வரும் கோப்பில் குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களோடு சம்பந்தப்பட்ட சில கதைகளைக் காணலாம். இது அரபி வார்த்தைகளோடும் அவற்றின் பொருளோடும் பரிச்சயத்தை ஏற்படுத்துகிறது. இது அந்த சூராக்கள் எதைப் பற்றி பேசுகின்றனவோ அவை முழுவதையும் உள்ளடக்கியிருப்பதில்லை. சில சமயம் அது அந்த சூரா சொல்லக்கூடிய செய்தியோடு தொடர்புள்ளதாக உள்ளது. ஆனால், முக்கியமான குறிக்கோள், சூராக்களின் பெயர்களை வரிசைக்கிரமமாக நன்றாக பழக்கப்படுத்திக் கொள்வது தான். இது நினைவு கூர்வதற்கு உதவும் ஒரு வழி.