குர் ஆனுக்கு பல மொழி பெயர்ப்புகள் இருந்தாலும், அவை எதுவும் படிப்பவர்கள் அரபி வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்தோடு தொடர்பு படுத்த உதவுவதில்லை. இந்த ‘சொல்லுக்கு சொல்’மொழிபெயர்ப்பின் ஒரே நோக்கம் குர் ஆனுடைய மொழியைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குவது தான். வேறு பல ‘சொல்லுக்கு சொல்’அகராதிகள் இருந்தாலும் இந்த மொழிபெயர்ப்பு மற்றவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணங்களை கீழே காணுங்கள்:
ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் அதன் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது;
இடது கட்டத்தில் உள்ள பொருள் அரபிக்கு மிக அண்மையில் இருக்கிறது. இந்த முழு செயல்முறையின் நோக்கம், குர் ஆனைப் படிப்பவர் அரபி சொற்களின் பொருளை நேரடியாக புரிந்து கொள்வதற்கு உதவுவது தான்;
ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கட்டத்தில் புரிவதற்கு சிரமமான வார்த்தைகளுக்குப் பொருள் இருக்கும். அல்லது அவற்றிற்கு வேறு பரிச்சயமான அல்லது பயனுள்ள வடிவங்கள் இருக்கும். மொத்தத்தில் இந்த கட்டத்தின் நோக்கம், புதிய அரபி வார்த்தையைப் படிப்பவர் எளிதாக அதை உபயோகப்படுத்தவும், அவருக்கு ஏற்கனவே பரிச்சயமான சொற்களுடன் அதைத் தொடர்பு படுத்தவும் உதவுவது தான். ஒரு சிறிய எண் ஆங்கிலப் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும் (அதாவது, ஒவ்வொரு அரபி வார்த்தைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தாங்கியிருக்கும் சிறிய பெட்டிகள்). அதற்க்கான விளக்கம் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும்;
இறுதியாக, இந்த அமைப்பு வழக்கமாக ஓதும்போதும் தொடர்ந்த மீள்பார்வைக்கு உதவும்.
குர்ஆன் மொழிபெயர்ப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன :