நற்சான்றுகள்
அன்புள்ள சகோதரர்/ சகோதரி,
நீங்கள் எங்களுடைய பாடங்களில் ஒன்றை முடித்திருந்தீர்கள் எனில், உங்களிடைய வெற்றியை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், கீழுள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
எங்கள் பாடத்தைத் தொடங்குவதற்குமுன் குர்ஆனுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது?
அதைப்பற்றி நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
உங்கள் ‘குர்ஆனைப் புரிந்து கொள்ளுங்கள்’பாடத்தில் உங்களுக்கு சிறந்த பகுதி எது?
குர்ஆனுடன் உங்கள் உறவு இப்போது எப்படி இருக்கிறது?
உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
இவ்வகையில் அரபி மொழியைக் கற்றுக் கொடுப்பது புனித குர்ஆனை முழுதும் புரிந்து கொள்ள உதவும் என்பதால் அனைத்து நிறுவனங்களும், அமைப்புகளும் இம்முறையைக் கடைப்பிடிக்கும் படிபரிந்துரை செய்கிறோம்.
~அல் முஃபர்ஜி, (இஸ்லாமிய தகவல் மையம்) ஓமன்
இப்பாடத்திட்டத்தின் சிறந்த பகுதி ,இலக்கணத்தை புதிய தொழில் நுட்பம் வழியாகக் கற்றுக் கொள்வது.
~எஸ். பர்வீன், முதல்வர், கிரெசென்ட் கல்லூரி.
நான் முதல் நிலைப் பாடத்தை மிகவும் திறன் மிக்கதாகவும், பயனுள்ளதாகவும் கண்டேன்.
~முஹமதுஅப்துல்ரஷீத், எம். எஸ்.ஸி., ஜெ.எம்.ஐ., புதுடில்லி
கற்பித்தலில், நவீன தொழில் நுட்பம் மிக நல்ல முறையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
~எம்.சி.ஏ. மாணவர், மதினாஎம்.சி.ஏ. கல்லூரி
பிப்ரவரி அல்லது மார்ச்சில் ஜாமியாவுக்கு அப்துர்ரஹீம் நயீமுதீன் சாஹபின் வருகையைப் பற்றி அறிந்தேன். அல்லாஹ்வின் மீது சாட்சியாக ,இதற்கு முன் நான் இப்படிப்பட்ட எழுச்சியூட்டக்கூடிய, திட்டமிடப்பட்ட, சுவாரசியமான வகுப்பில் கலந்து கொண்டதில்லை. வகுப்புகள் என்னை சிரிக்கவும் வைத்தன,அழவும் வைத்தன. நான் தேடிக் கொண்டிருந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.என் வகுப்பில் அரபி இளங்கலை பயின்று கொண்டிருந்த மாணவர்களும் இருந்தனர் .ஆனால் ,அல்ஹம்துலில்லாஹ், பயிற்சியாளர் மிக நன்றாக இருந்ததால், நான் 96% எடுத்து வகுப்பில் முதலாவதாக வந்தேன். என் நண்பர்களில் சிலர் அரபியில் பூஜ்யமாக இருந்தவர்கள் கூட 80%க்கு மேல் எடுத்தார்கள்.
நான் இரண்டாவது நிலையை முடிக்கப்போகிறேன். அல்லாஹ் நாடினால், அண்டர்ஸ்டாண்ட் குரானின் தன்னார்வ பயிற்சியாளராக என்னை இணைத்துக்கொள்ளப் போகிறேன். நான் மனவ் ரச்னா சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஃபரிதாபாத்) பி.டெக். மாணவன்)
~அஜ்மல் ரஷீத், புது டெல்லி
எனக்கு 66 வயதாகிறது, குர்ஆனைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு குறும்பயிற்சியில் சேர்ந்தேன், ஆனால் அது புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. பிறகு, ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆன்’வகுப்பில் சேர்ந்து படித்தபோது, சகோதரர் அப்துர்ரஹீம் டி.பி.ஐ. முறையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்தது புரிந்து கொள்ள சுலபமாக இருந்தது. அல்லாஹ் அவருக்கும், இக்கல்வியை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அருள் செய்வானாக.
~முஹம்மது இஸ்மாயில், சிகாகோ, யு.எஸ்.ஏ.
அரபி இலக்கணத்தின் டி.பி.ஐ. பயிற்சி மிகவும் புதுமையாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது.
~முதல்வர், இஸ்லாமியா பெண்கள் ஜுனியர் கல்லூரி
இந்த வலைதளம் எனக்கு ஒரு அற்புதத்தை செய்திருக்கிறது. நான் என்றும் என்னால் அரபியை படித்து, புரிந்து கொண்டு நானாகவே (என் தாய்மொழி) உருதுவில் மொழிபெயர்க்க முடியும் என நினைத்ததில்லை.. ஆனால் இவ்வகுப்பு என்னுடைய கனவை மெய்யாக்கியிருக்கிறது…இது மிகவும் ஈர்ப்பதாகவும், சுலபமாகவும், சுவாரசியமானதாகவும் இருக்கிறது. நான் குறும்பயிற்சி 1ஐ முடித்து விட்டு குறும்பயிற்சி 2ன் ஒளிப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. இரண்டாவது பகுதி வெளியிடப்படுவதற்க்காக பொறுமையின்றி காத்திருக்கும் போது நான் அடிப்படை பாடத்தை ஆரம்பித்து பாதி முடித்து விட்டேன், ஆனால் அது விடியோவுடன் கூடிய வகுப்புகள் போல் பயனுள்ளதாக இல்லை. ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆன்’மகத்தான பணி செய்து கொண்டிருக்கிறது.எங்களுக்கு உண்மையான அறிவைப் போதித்ததற்க்காக உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி வழங்கப்பட வேண்டும் என துவா செய்கிறேன்…இந்நற்காரியத்தை தொடரட்டும். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
~இரம், குவைத்
நான் ஒரு குறுகிய கால படிப்பில் சேர்ந்தேன், ஆனால் அதைப் புரிந்து கொள்ள சிரமப்பட்டேன். பிறகு, நான் ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆன்’வகுப்பின் மூலம் படித்த போது, டி.பி.ஐ. உத்திகள் மூலம் சகோதரர் டாக்டர் அப்துல்லாஹ் தாரிக் நடத்தும்போது புரிந்து கொள்வது லேசாக இருந்தது.
~அமீர் ஹாஷ்மி, மொராடாபாத், உ.பி. இந்தியா
என்னுடைய அரபி படிப்பிற்கு மூன்று வருடங்களுக்கு முன் குறுகிய கால பயிற்சியில் சேர்ந்தேன், அது மிக நன்றாக இருந்தது. நான் இதைப்பற்றி பலருக்கும் சொன்னேன், பெரும்பாலோர் இவ்வகுப்பு பற்றி திருப்தியுற்றார்கள்.
இவ்வருடம் 2012-13 கல்வியாண்டுக்கான 14-17 வயதிலுள்ளவர்களான பாடத்தைத் தயார் செய்யும்போது, அரபி கற்றுக்கொடுக்க நான் ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆன்’பாடங்களை உபயோகித்தேன். சில மாற்றங்கள் உள்ளன. துரதிருஷ்டவசமாக முழு பாடத்திட்டமும் தயாராக இல்லை. நான் முழு பாடத்திட்டத்தையும் பயன்படுத்த இயலும் என நம்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
அடிக்குறிப்பு
இது இலவசமாக இருந்தது, இப்போது வர்த்தக நோக்கை நோக்கி செல்வது போல் தோன்றுகிறது..
நான்சொல்வதுதவறுஎன்றுநம்புகிறேன்.இந்த வகுப்புகளுக்கு ஆகும் செலவிற்கு வேறு வழியில் நிதி கிடைக்கும் எனவும் நம்புகிறேன்.
~அப்துல் கனி, மாஸசூசெட்ஸ், யு.எஸ்.ஏ.
முதல் முறை அரபி படிக்கும்போது, இந்த ஒளிப்படங்கள் பெரும் உதவியாக இருந்தது. படிக்கும்போது, எங்களுடைய பாடப்புத்தகத்தில் உள்ள எழுத்துக்களைப் பார்க்கும்போதே குழப்பமாக இருந்தது. ஆனால், நீங்கள், காற்றில் அல்ல, குறிப்பேட்டின் கோட்டின் மேல் எழுத சொல்லிக்கொடுத்த போது, என்னுடைய புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் ஒளி பெற்று எப்படி எழுத வேண்டும் என்பது தெளிவாகியது. நான் கூறும் ஒரே ஒரு ஆலோசனை (குறை அல்ல) பாடம் நடத்தும் போது, உங்களுடைய குரல் மென்மையாக இருக்கிறது. பதிவு செய்யும் ஒலியை அதிகரிக்க இயலுமா? நன்றி!
~சிஹிரோ
சமீபத்தில் எனக்கு ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆனுடன்’ தொடர்பு ஏற்பட்டது. அல்ஹம்துலில்லாஹ், என்னை மிகவும் அதிர்ஷ்ட சாலியாக உணர்கிறேன். பொதுவாக அரபி இலக்கணத்தை நாம் மிகவும் வரண்டதாகவும், கடினமானதாகவும் நினைக்கிறோம். இப்போது நான் ‘குறுகிய கால பயிற்சி 1’(உருது) பயில்கிறேன். அரபி இலக்கணம் கற்பதற்கு அது மிக மிக சுவாரசியமான வழி. இந்த பாடத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒளிப்பட விரிவுரைகள் (video lectures) மிகப்பெரும்பங்கு வகிக்கின்றன. ‘குறுகிய கால பயிற்சி 2க்கும் ஒளிப்பட விரிவுரைகள் தயார் செய்யும்படி ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆன்’குழுவை நான் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போது ‘அண்டர்ஸ்டாண்ட் குர்ஆன்’குழுவை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டாலும் எனக்கு மிக விரிவான, விரைவான பதில் கிடைக்கும்.
அல்லாஹ் இந்த மகத்தான திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக.
~சுமையா வஸீம், ஜுபைல், சௌதி அரேபியா