அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லஹ்வின்
பெயரால்..
தற்போதைய சூழல்
முஸ்லிம்களாகிய நமக்கு ன் தான் வாழ்வின் மையமாக இருந்திருக்க வேண்டும். ஏறக்குறைய 90% அரபியரல்லாத முஸ்லிம்களுக்கு னின் ஒரு பக்கத்தை கூட புரிந்து கொள்ள முடியாது!
இறுதி தீர்வு
அல்லாஹ் கூறுகிறான், (நபியே) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்க்காகவும். (அல் ன் 38:29)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நான் உங்களிடையே இரு கனமானவற்றை விட்டுச்செல்கிறேன். முதலாவது: அல்லாஹ்வின் வேதம்…..(மேலும் அவர் கூறினார்)…அல்லாஹ்வின் வேதத்தை இறுகப்பிடித்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள்.’(முஸ்லிம்)
எங்கு நோக்கினும் மனஅழுத்தம் ஏன்?
ஏனென்றால் நாம் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று போராடிக்கொண்டிருக்கிறோம். நாம் நிம்மதியை விரும்புகிறோம். ஆனால், இஸ்லாமிய அறிவு என்று வரும்போது நமக்கு எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. அதற்கும் மேல், நம் பள்ளிகள் னை முழுமையாக சொல்லிக் கொடுப்பதில்லை. அது நிச்சயமாக அழிவுக்கான வழி. நாம் எவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை திருத்திக் கொள்ள வேண்டும்.
இதன் அவசரம் புரிகிறதா உங்களுக்கு? ன் வைத்திருப்பதற்கு நல்ல பொருள் மட்டுமல்ல – அது, நம்முடைய நன்மைக்காக, கண்டிப்பாக புரிந்து, நடைமுறைப் படுத்த வேண்டிய ஒன்று..
எங்களுடைய குறிக்கோள்/பணி
அதனால் தான் ‘அண்டர்ஸ்டான்ட் ன் அகாடெமி’மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளது:
ன் அறியாமையைப்போக்குவது
னை மிகவும் சுவாரசியமான, எக்காலத்துக்கும் பொருந்தும் புத்தகமாக அளிப்பது. (நமக்கு எப்படி கற்றுக் கொடுப்பது என்று தெரியாவிடில், அல்லாஹ்வின் புத்தகம் எப்படி சலிப்பூட்டுவதாக இருக்கும்?)
வருங்கால சந்ததியினருக்காக ஒரு னிய சமுதாயத்தை உருவாக்கி அவர்கள் மூலம் மனித சமுதாயம் முழுதையும் நெருங்குவது.
இறுதியாக, எங்கள் குறிக்கோள், மக்களை னுடைய உரிமைகளை பூர்த்தி செய்ய அழைப்பது: அதை நம்புவது, அதை ஓதுவது, அதைப் புரிந்து கொள்வது, சிந்திப்பது, பின்பற்றுவது, பரப்புவது, முடிந்தவரை மனப்பாடம் செய்வது.
எங்களுடைய எதிர்கால நோக்கு
இந்த பாடங்கள் மூலமாக அரபி பேசாத 1.3 பில்லியன் முஸ்லிம்களை அடைவது, பிறகு அவர்கள் மூலமாக 5.5 பில்லியன் முஸ்லிமல்லாத சகோதரர்களையும், சகோதரிகளையும், னின் செய்தியோடு அணுகுவது (னின் செய்தி நமக்கே புரியாமல் இருக்கும்போது நாம் எப்படி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது?)
எங்களுடைய செயல்முறை
நீங்கள் இளைஞரா, முதியவரா, எந்த பின்புலத்தைச் சார்ந்தவர் என்பதையெல்லாம் பார்க்காமல், நடைமுறையில் னை ஓதவும், புரிந்து கொள்ளவும், தொடர்பு படுத்தவும் (to Interact) கற்றுக் கொடுக்கிறோம்.
எங்களுடைய குழு
ஏறக்குறைய 50 ஆராய்ச்சியாளர்கள், iஉருவாக்குபவர்கள் (developers), வரைகலை நிபுணர்கள் (graphics specialists), இணைய வடிவமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், எழுத்தாளர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரையும் கொண்ட எங்கள் குழு, எங்களுடைய பாடங்கள் அனைவருக்கும் பொருந்தும்படி இருக்க உறுதி செய்வதோடு, நவீன கற்பிக்கும் முறைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஏறக்குறைய 100 பள்ளிகள், ன் கற்றுக் கொடுப்பதற்கு எங்களுடைய நிகழ்ச்சிகளை செயல்முறைப் படுத்துகின்றன. மழலையர் வகுப்பிலிருந்து ஆரம்பித்து, அவர்கள் உயர்நிலைப்பள்ளியை முடிக்கும்போது ன் முழுவதையும் கற்றுக் கொடுக்கக் கூடிய தொகுப்பை நாங்கள் அளிக்கிறோம்.
எங்களுடைய பாடங்கள் – பொருத்தமான ஆரம்பம்
தொழுகையின் மூலமாக னைப் புரிந்து கொள்வதை விட எளிய, பொருத்தமான முறை வேறெதுவும் இருக்க முடியாது. எங்களுடைய இம்முறையில் நீங்கள் ஆச்சரியப்படக்கூடிய வகையில் னின் 50% வார்த்தைகளை இலக்கணத்தோடு கற்றுக் கொள்ளலாம். ‘னின் 50% வார்த்தைகளை புரிந்து கொள்ளுங்கள்’பாடத்திற்குப் பிறகு, நீங்கள் இரண்டாவது வகுப்பைத் தொடரலாம்; னின் 70% வார்த்தைகளை பத்தே மணி நேரத்தில் படிக்கலாம் – மேலும் அது உங்களை 70% உயர் நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அதன் பிறகு நீங்கள் முழு னையும், உங்களுடைய வேகத்தைப் பொருத்து 200-300 மணி நேரங்களில் புரிந்து கொள்ளலாம்.
எதிர்கால பாடங்கள்
இன்ஷா அல்லாஹ், விரைவில் நாங்கள் அல் னைப் படியுங்கள், சரளமாக, பரிச்சயத்துடன், மற்றும் வேறு தனித்துவமிக்க, நடைமுறைக்குரிய பாடங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
எங்களுடைய தயாரிப்புகள்
அனைவரும் மிகவும் திறன்மிக்க வகையில் கற்பதற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், பாடங்களைத்தவிர, எங்களுடைய வலைதளத்தில், வளங்கள் பகுதிகளில், சொலுக்கு சொல் மொழிபெயர்ப்பு, எழுத்துக்கு எழுத்து உச்சரிப்பு, அகராதிகள் மற்றும் பல சாதனங்கள் உள்ளன.
எங்களோடு இணைந்து எங்கள் பணித்திட்டதில் ஒரு பகுதியாக இருங்கள்!
முஹமது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் சிறந்தவர் னை தானும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே.”என கூறினார்கள். (புகாரி)
அவர் (ஸல்) “நிச்சயமாக, அல்லாஹ் இந்த குரானைக் கொண்டு சிலரை உயர்த்துகிறான், சிலரை தாழ்த்துகிறான்.”(முஸ்லிம்) அதாவது, எவர் குர ஆனின் உரிமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் இவ்வுலகிலும், மறுமையிலும் உயர்த்தப்படுவார்; எவர் அதை விட்டு விடுகிறாரோ அவர் தாழ்த்தப்படுவார்.
இந்த உம்மத்தை மீண்டும், உண்மையான இறுதித்தீர்வான னின் பக்கம் கொண்டு வருவோம்.
‘அண்டர்ஸ்டான்ட் ன் அகாடெமி’யின் பாடத்திட்டங்களை நடுவங்கள், பள்ளிகள், பள்ளிவாயில்கள், நிறுவனங்கள் இவற்றிற்கு அறிமுகம் செய்வதன் மூலமும், உலக மொழி அனைத்திலும் மொழிபெயர்ப்பதன் மூலமும் எங்களுக்கு உத்வுங்கள்.
னை ஓதி, புரிந்து, சிந்தித்து, நடைமுறைப் படுத்தி, அதை பரப்ப வேண்டும் என்ற எங்கள் பணித்திட்டத்தில் ஒரு பகுதியாக இருங்கள்!
ஜஸாக்குமுல்லஹு ஹைரன் – அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
நல்வாழ்த்துக்களோடும் பிரார்த்தனைகளோடும்,
டாக்டர் அப்துல் அஸீஸ் அப்துர்ரஹீம்